ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தை “புல்லணை” என்றும் அழைப்பார். “புல்லணை என்பது “திருப்புல்” அப்புல்லில் இராமன் பள்ளிகொண்டு எழுந்தருளியதால் ‘புல்லணை” என்று பெயர் வழங்கப்பட்டது. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அள்ளி கொஞ்ச ஒரு குழந்தை இல்லாமல் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்புல்லானி ஆதிஜெகனாதபெருமாள் கோவில் சென்று இங்கு இருக்கும் பெருமாளையும் பத்மாஸனித்தாயாரையும் வணங்கி காலையில் கோவிலில் படைக்கப்படும் பிரசாதமான பாயாசம் சாப்பிட்டு விட்டு சென்றால் அந்த [...]