உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அன்னா ஹசாரே குழுவினர் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர். மணிப்பூர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் குழுவினர் பிரசாரம் செய்தனர். அப்போது உங்கள் வாக்கு இந்தியாவின் சரித்திரத்தை மாற்றும் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். பின்னர் பேசுகையில் [...]
கொழும்பு: தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தி (Palk Strait), மன்னார் வளைகுடா (Gulf of Mannar) ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்க ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்றுள்ள நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு, கடல்வளத்தை நீடித்திருக்கச் செய்வது, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற அம்சங்களை இந்த [...]