Mayuri TV

2012ன் கிரகப் பெயர்ச்சிகள்
கிரகப் பெயர்ச்சியினால் குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படுகிறது. குரு, ராகு, கேது பெயர்ச்சிகளின் போது அதற்காக சிறப்பு பூஜைகளும், வழிப்பாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.

2012ம் ஆண்டு நிகழும் கிரகப் பெயர்ச்சிகள்:

குருபெயர்ச்சி:

நந்தன வருஷம் வைகாசி மாதம் 4ம் தேதி (17-05- 2012) வியாழக்கிழமை குருபகவான் 3.01 நாழிகைக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி:

நந்தன வருஷம் கார்த்திகை மாதம் 17ம் தேதி (02-12-2012) ஞாயிறுக்கிழமை ராகு பகவான் 11.31 நாழிகைக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கின்றனர்.

அக்னி நட்சத்திரம்:

நந்தன வருஷம் சித்திரை மாதம் 22ம் தேதி (04-05-2012) வெள்ளிக்கிழமை 2.33 நாழிகைக்கு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து, வைகாசி மாதம் 15ம் தேதி (28-05-2012)

திங்கட்கிழமை 20.16 நாழிகைக்கு நிவர்த்தி அடைகின்றது.

வேட்டை விமர்சனம்
பயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை… மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.

ஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு ஏற்கிறார். அங்கு இரு தாதா கோஷ்டிகள் கொலை, கள்ளக்கடத்தல் என தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.

போலீசே அவர்களை கண்டு நடுங்குகிறது. ரவுடிகள் கடத்தும் குழந்தையை மீட்கும் பொறுப்பை மாதவனிடம் மேலதிகாரிகள் ஒப்படைக்கின்றனர். அவருக்கு பதில் ஆர்யா ரவுடிகளுடன் மோதி குழந்தையை மீட்டு கொடுக்கிறார்.

மாதவன்தான் மீட்டார் என நினைத்து சக போலீசார் அவரை கொண்டாடுகிறார்கள். கடத்தல் லாரிகளையும் ஆர்யா மடக்கி மாதவனுக்கு புகழ் சேர்க்கிறார். வெறியாகும் வில்லன்கள் மாதவனையும் ஆர்யாவையும் தீர்த்துக்கட்ட வியூகம் வகுக்கின்றனர். அவர்களுக்கு இருவரும் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்…

லிங்குசாமி, மாதவன், ஆர்யா கூட்டணியில் வந்துள்ள வீரியமான கமர்ஷியல் மசாலா. ஆர்யா ஆக்ஷனில் வெளுத்து கட்டுகிறார். முகத்தை மறைத்த தொப்பியுடன் குழந்தை கடத்தல்காரர்கள் ஏரியாவுக்குள் நுழைந்து அடித்து துவம்சம் செய்வது அனல்… ரவுடிகளால் அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் மாதவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரவுடி கும்பல் கூட்டத்தில் புகுந்து அவர்கள் அழிவுக்கு கெடு வைத்து திரும்புவது ஆரவாரம்.

மாதவன் `கோழை’ போலீஸ் அதிகாரி கெட்டப்பில் கலகலப்பூட்டுகிறார். தம்பியின் சாகசங்களை தான் செய்ததாக நம்ப வைத்து பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாவது ரகளை. அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும்போது தம்பி ஆர்யாவை தாக்கும் ரவுடிகள் மேல் ஆவேசப்பட்டு விழுந்து தடுமாறி எழுந்து நடக்கையில் பாசத்தை கொட்டுகிறார்.

சமீராரெட்டி, அமலாபால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது உண்டு தவிப்பதும் ரசனையான பதிவுகள்.

அமலாபாலுக்கும் ஆர்யாவுக்குமான காதல் கவித்துவ தொகுப்பு. அமலாபாலை அமெரிக்க மாப்பிள்ளைக்கு சமீரா மணமுடிக்க முயற்சிப்பதும், அந்த மாப்பிள்ளையை ஆர்யா மடக்கி சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்து தானே மணமகனாவதும் குலுங்க வைக்கும் காமெடி. போலீஸ் அதிகாரி மனைவியாக சமீராரெட்டி மிடுக்கு காட்டுகிறார்.

வீட்டில் புகுந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க போராடும் கிளைமாக்ஸ் பதட்டப்படுத்துகிறது. அமலாபால் கண்களால் வசிகரிக்கிறார். பாடலில் தாராள கவர்ச்சி. நாசர், தம்பிராமையா சிரிக்க வைக்கின்றனர். சகோதர பாசம், காதல், ஆக்ஷன் கலவையில் திரைக்கதையை விறு விறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

அமெரிக்க மாப்பிள்ளை சீன்கள் ஈர்க்க வில்லை. யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை பலமாக இருந்தாலும் பாடல்கள் கவர வில்லை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம். நல்ல `வேட்டை’.

திருப்புல்லாணி பெருமாள் கோவில்
ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தை “புல்லணை” என்றும் அழைப்பார். “புல்லணை என்பது “திருப்புல்” அப்புல்லில் இராமன் பள்ளிகொண்டு எழுந்தருளியதால் ‘புல்லணை” என்று பெயர் வழங்கப்பட்டது. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அள்ளி கொஞ்ச ஒரு குழந்தை இல்லாமல் நிறைய‌ பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருப்புல்லானி ஆதிஜெகனாதபெருமாள் கோவில் சென்று இங்கு இருக்கும் பெருமாளையும் பத்மாஸனித்தாயாரையும் வணங்கி காலையில் கோவிலில் படைக்கப்படும் பிரசாதமான‌ பாயாசம் சாப்பிட்டு விட்டு சென்றால் அந்த பெருமாளின் கருணையினால் கண்டிப்பாக‌ குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இத்தலத்திற்கு வந்து, சாந்தான கோபாலகிருஷ்ண சந்நிதிக்கு முன் தக்க ஹோமங்கள் செய்து வழிபட்டால் புத்திப்பேறு கிடைக்கும். எத்தனையோ டாக்டர்களிடம் காண்பித்து சரியாகதவர்கள் இங்கு வந்து வணங்கி செல்கின்றனர். இங்கு வந்து வணங்கி சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

போக்குவரத்து வசதி…

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து ரெயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது.

அன்னாஹசாரே குழு பிரசாரம்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அன்னா ஹசாரே குழுவினர் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர். மணிப்பூர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் குழுவினர் பிரசாரம் செய்தனர். அப்போது உங்கள் வாக்கு இந்தியாவின் சரித்திரத்தை மாற்றும் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். பின்னர் பேசுகையில் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற விடமால் காங்கிரசும், மற்ற அரசியல் கட்சிகளும் தடுத்து விட்டன. நாட்டு மக்களை மத்திய அரசு மோசடி செய்து விட்டது. அந்த அரசு மக்களுக்கு தேவையா என சிந்திக்க வேண்டும். நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயல்பட வில்லை.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற எந்த கட்சியும் விரும்பவில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டுவர வேண்டும் என்பன உள்பட அரசியல் கட்சிகளுக்கு 6 நிபந்தனைகள் விதித்து உள்ளோம். அரசியல் கட்சிகள் இதில் தங்கள் நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ராகுல் காந்தி, முலாயம்சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் லோக்பால் மசோதா நிறைவேற விடாமல் தடுத்தார்கள். சி.பி.ஐ. மூலம் ஊழல்வாதிகளை மத்திய அரசு பாதுகாக்கிறது. எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்.

லோக்பால் மசோதா ஒட்டெடுப்புக்கு வந்த போது மாயாவதி கட்சி, முலாயம்சிங் கட்சி வெளிநடப்பு செய்தது ஏன்? இதன் மூலம் அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். மாயாவதியும், முலாயம் சிங் யாதவும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில மோசடியில் சிக்கி இருக்கிறார்கள். சி.பி.ஐ.யை வைத்து காங்கிரஸ் அவர்களை மிரட்டுகிறது.

லோக்பால் மசோதா ஒட்டெடுப்பு விவகாரத்தில் காங்கிரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்ததன் மூலம் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீதான சி.பி.ஐ. வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நடுநிலையாளர்கள் என்ற நிலையில் அன்னாஹசாரே குழுவினரின் அதிரடி பிரசாரத்தால் அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. பாரதீய ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளது.

இதேபோல் அந்த கட்சி ஆளும் மற்ற மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு அன்னா ஹசாரே குழு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தொழில்
கொழும்பு: தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தி (Palk Strait), மன்னார் வளைகுடா (Gulf of Mannar) ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்க ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்றுள்ள நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு, கடல்வளத்தை நீடித்திருக்கச் செய்வது, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற அம்சங்களை இந்த உடன்பாடு கவனத்தில் கொள்ளும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமை தொடர்பான கோரிக்கையைக் கைவிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன பேட்டியளித்திருந்தார்.

இந் நிலையில் இதற்கு விளக்கமளித்து இலங்கை வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

மீன்பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் 4வது கூட்டம் கடந்த 13, 14ம் தேதிகளில் நடந்தது. அதில் பாரம்பரிய மீன்பிடி உரிமை போன்றவற்றில் இந்தியாவும் இலங்கையும் தத்தமது நிலையைத் தொடர்ந்து வலியுறுத்தின.

அதே நேரத்தில் இரு நாட்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலைச் செய்வதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தங்களது அரசுகள் எடுக்க விரும்புவதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் பாதுகாப்பு, கடல்வளம், கடல் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு தீர்வை எட்டும் வகையில் தொடர்ந்து பேசுவதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, மீன் பிடி தொழிலில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தை மிக விரைவில் செய்து கொள்ளவும் இருதரப்பும் சம்மதித்திருக்கின்றன.

கடலின் தரைப்பகுதிவரை வலைவீசி மீன்பிடிக்கும் நவீன முறையை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும்
சென்னை: இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை:

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நிகழ்த்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பெளத்த இனவாத அரசின் தலைவர் ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க இந்திய அயலுறவு அமைச்சர் வலியுறுத்துவதும், அதற்கு செவிசாய்ப்பதுபோல் ராஜபக்சவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தத்திற்கும் அதிகமாகச் சென்று தீர்வுத் திட்டத்தை அளிக்கப் போகிறேன் என்று கூறுவதும் தமிழர்களை மட்டுமல்ல, உலக நாடுகளையும் ஏமாற்ற இந்திய மத்திய அரசும், இனவாத சிங்கள அரசும் இணைந்து அரங்கேற்றி வரும் கபட நாடகமாகும்.

மிகச் சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையின் மீது பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மீதான எந்த அதிகாரமும் மாகாண சபைகளுக்கு அளிக்கப்போவதில்லை என்பதை உறுதியுடன் கூறியிருந்தார்.

அதேபோல், தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.viagra online இவை யாவும் அந்நாட்டு நாளிதழ்களிலும், இணையத் தளங்களிலும் தெளிவாக வெளியிடப்பட்ட செய்திகளாகும்.

அதுமட்டுமல்ல, அதிகாரப் பகிர்வுத் தொடர்பாக அரசின் திட்டம் என்ன என்பதை விளக்கிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டதற்கு, அதைப்பற்றியெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாது என்று மறுத்தது ராஜபக்ச அரசு.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று பேசிய இனவெறியன் கோத்தபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்கு தீர்வு என்று கூறுவதற்கு ஏதுமில்லை என்று பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு வெளிவந்த கொழும்புச் செய்திகளில் கூட, 13வது திருத்தம் பிளஸ் என்றால் என்னவென்று கேட்டதற்கு, நாடாளுமன்ற மேலவையை அமைத்து தமிழர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிப்பதே என்று இலங்கை அரசின்

பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்லா கூறியுள்ளார். தமிழர்கள் கேட்பது சம உரிமை, முழுமையான அதிகாரப் பகிர்வு. ஆனால் இலங்கை அரசு பேசுவது வெற்று பிரதிநிதித்துவம்!

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் இன்றைய மத்திய அரசும் வலியுறுத்தும் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தமிழர் மாகாணங்கள் இணைப்பு என்பது ஏற்கனவே அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதை நன்கு அறிந்த பின்னரும், திரும்பத் திரும்ப அதைப் பற்றியே மத்திய அரசு வலியுறுத்துவது ஏன்? அது இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றவும், உலக நாடுகளை திசை திருப்பவுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சவையும், இலங்கை அரசையும் சர்வதேச மனித உரிமை நீதிமன்றத்தில் நிறுத்த, பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வரும் நிலையில், இரண்டு அரசுகளும் சேர்ந்து இப்படிப்பட்ட ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகின்றன என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உள்நாட்டுப் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் நம் சொந்தங்களுக்கு எதிரான இனப் படுகொலையும், கடத்தல்களும், கற்பழிப்புகளும் இன்றும் நமது மற்றொரு தாய் மண்ணில் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களின் துயரை உலகின் பார்வைக்குக் கொண்டு வரவே ஒரு பன்னாட்டு பார்வையாளர்கள் குழுவை ஐ.நா. இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். எனவே, இலங்கைத் தீவில் சம உரிமையுடனும், முழுச் சுதந்திரத்துடன் தமிழர்கள் வாழ வேண்டுமெனில் அதற்கு தனித் தமிழ் ஈழம் அமைப்பதே ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற உறுதியான இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் சுதந்திர வேட்கையை முடக்க முயற்சிப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையையும் இந்திய அரசு விட்டுத் தந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அலுவலர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதி முழுவதிலும் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமை என்கிற வாதத்தை இந்திய அரசு விட்டுவிட வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை வைத்ததாகவும், அதனை இந்தியத் தரப்பு

ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கை அரசு அதிகாரி கூறியுள்ளதாக இலங்கை செய்திகள் கூறுகின்றன.

அது உண்மையானால், பாரம்பரிய மீன் உரிமை என்ற சட்ட ரீதியிலான அடிப்படையை தமிழக மீனவர்களும், நமது ஈழத் தமிழ் சொந்தங்களும் இழக்கும் அபாயம் உள்ளது. இதனை தமிழக மீனவர்கள் முழுமையாக அறிந்துகொண்டு, தங்களது உரிமையை நிலைநாட்ட போராட வேண்டும்.

இன்றைக்குள்ள மத்திய அரசு தமிழினத்தின் நலன்களையும், உரிமைகளையும் முழுமையாக விட்டுத் தந்து இலங்கையுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது. எனவே இந்த அரசை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி எச்சரிக்கிறது,” என்று கூறியுள்ளார் சீமான்.